என்னதான் டிப் டாப்பா ஆடை அணிந்தாலும் பாரம்பரிய ஆடைகள் அணியும் போது இருக்கக் கூடிய பெருமை வேறு எந்த ஆடையிலும் கிடைக்காது என்றே கூறலாம். குறிப்பாக ஆண்களின் ஆடைகளில் வேஷ்டி அணியும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

வேஷ்டி தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை.தமிழர்களின் கலாசார அடையாளமாகவும், ஆண்களுக்கான கம்பீரத்தின் உணர்பொருளாகவும் வேஷ்டி தமிழர்களால் வரவேற்கப்படும் ஒரு ஆடையாகும்.தொன்று தொட்டு தமிழர்கள் வேஷ்டி அணியும் பழக்கத்தை இன்றும் தங்கள் வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

வேறு பெயர்கள்

தமிழர்கள் பெருமிதமாக அணியும் வேஷ்டி சம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா என்று பெயர். குஜராத்தில் தோத்தியு, ஒரிய மொழியில் தோத்தி, வங்காளத்தில் தூட்டி, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாபி மொழியில் லாச்சா, உ.பி, பீகார்மாநிலங்களில் மந்தாணி, கன்னட மொழியில் கச்சே-பான்ச்சே, அசாமியில் சூர்யா, தமிழகத்தில் வேட்டி மற்றும் வேஷ்டி என்று அழைப்பார்கள்.

வகைகள்

பருத்தி நூலில் நூற்கும் வேஷ்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேஷ்டியில், முகூர்த்த வேஷ்டி, தற்காப்பு கலை வேஷ்டி, பட்டு வேஷ்டி, பூஜை வேஷ்டி, சாதாரண வேஷ்டி என பல வகை உண்டு.

பண்பாடு

முதலில் வேஷ்டி நம் பாரம்பரிய அடையாளம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆண்கள் அணியும் ஒரு சாதாரண உடையாக வேஷ்டி இருந்து வருகிறது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய ஆடையான வேஷ்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முக்கியமாக திருவிழா மற்றும் திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் வேஷ்டி அணிவதை பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர். இத்தகைய பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மிக்க வேஷ்டியின் மீது இன்றைய தலைமுறையினர் பெரிதும் ஆர்வம் கொள்ள தயங்குகின்றனர் .

ஏனெனில் மேற்கத்திய கலாசாரம் தொற்றி இருப்பதால், நவீன காலத்தில் வித, விதமான ஆடைகளை அணிய தொடங்கி விட்டோம். இருப்பினும் சில சமயங்களில் கட்டாயத்தின் பேரில் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். அந்தவகையில் புத்தாண்டு, பிறந்தநாள், பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கியமான கொண்டாட்டங்களில் இப்போது கட்டாயம் இடம் பிடித்திருப்பது, பட்டு வேஷ்டிகள்தான்.

இளம்சிறார்களிடையே வேஷ்டியின் வரவேற்பு

இன்றைய காலத்தில், சிறுவர்கள் பட்டு வேஷ்டி அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டு வேஷ்டி அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டு வேஷ்டியை சிறுவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் ச ஃபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, “பட்டு வேஷ்டிக்கு” தான் என்றும் இன்றும் சிறப்பு.

சிறுவர்களுக்கான பிரத்யேக ரெடிமேட் கலெக்க்ஷன்ஸ்! சாரா வழங்கும் “அழகுராஜா”, பாரம்பரியம் மாறா பட்டு வேஷ்டி மற்றும் சட்டைகள்!

Share this post on: