பாரம்பரியத்தின் அடையாளம்: தமிழ்நாடு பல்வேறு கலாச்சாரங்களின் மற்றும் வரலாற்றில் முன்னணியில் நிற்கும் ஓர் அழகான நாடு. மக்கள் தங்கள் கலாச்சாரத்தை மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய பட்டு ஆடைகளை இன்றைய காலத்திலும் போற்றுகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தை உலகெங்கிலும் நிலைநாட்டும் வகையில், சாரா “ரெடிமேட் பட்டுப்பாவாடைகளுக்கு” தனி இடம் உண்டு. அனைத்து விதமான சுபகாரியங்களுக்கு மட்டுமே பட்டு அணியும் மரபு மாற்றமடைந்து வருகிறது என்பது பெருமைக்குரியது. ஜீன்ஸ், மிடி , டீ சர்ட் போன்ற மேற்கத்திய ஆடைகள் மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் பெண்கள், தற்போது பாரம்பரிய பட்டு ஆடைகள் மீதும் அதிக ஆர்வம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

பாரம்பரிய ரெடிமேட் பட்டு என்றாலே நம்ம “சாரா ஃபேஷன்ஸ்” தான்

“ரெடிமேட் பட்டு பாவாடை” யை அறிமுகம் செய்தது நம் சாரா ஃபேஷன்ஸ். தொடக்க காலத்தில் நாங்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் மட்டுமே வைத்து சுடிதார்களை தைத்து வந்தோம். அக்கட்டத்தில் சுடிதார் மெட்டீரியல்களுக்கு கடும் போட்டி இருந்தது. எனவே மக்களுக்கு எங்களை வேறுபடுத்தி காட்டவேண்டுமென்றும் மற்றும் தனித்து நிற்கவேண்டும் என்ற எண்ணத்தோடும், புதிதாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தோம். அப்போதுதான் ஒரு சின்ன யோசனை “பட்டு பாவாடையை ரெடிமேட்-ஆக தைத்தால் எப்படி இருக்கும்” என தோன்றியது. அந்த முயற்சியில் தான் ரெடிமேட் பட்டு பாவாடையை அறிமுகப்படுத்தினோம்.

அந்த சின்ன யோசனை தான் இப்பொழுது, நம்ம மதுரையில் “சாரா ஃபேஷன்ஸ்” முன்னணியாக திகழ்ந்து நிற்கிறது. இந்த நவீன உலகில் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பிரத்யேகமான டிசைன்ஸ் மற்றும் எண்ணற்ற வண்ணங்களுடன் உயர்தரம் வாய்ந்த பட்டு பாவாடையை தயாரித்து வழங்கி வருகிறோம்.

பிறந்த குழந்தை முதல் டீனேஜ் பெண்கள் வரை அனைவருக்கும் தயாரித்து வருகிறோம். “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.
பட்டு பாவாடை மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி மற்றும் கண்களை பறிக்கும் வண்ணங்களுடன் பட்டு சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். நம்ம சாரா ஃபேஷன்ஸ்-ல் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் வகையில் பட்டு பாவாடை & தாவணி மற்றும் பட்டு சர்ட் & வேஸ்டி பிரத்யேகமாக தயாரித்து வருகிறோம்.

சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!

 Like