Blog

ரெடிமேட் பட்டு ஆடைகள்:தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பரிய ஆடையான பட்டுகள் தான். பட்டுகளை தங்களுடைய கலாச்சார ஆடைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் “பட்டு” என்றாலே தமிழகம் நினைவுக்கு வருவதை யாராலும் தவிர்க்கவே முடியாது.

நம் தமிழக பண்பாடு மற்றும் கலாசாரத்தைப் பேசும் எக்ஸ்குளூசிவ் ரெடிமேட்  பட்டு பாவாடை மற்றும் பட்டு வேஷ்டி சர்ட் களுக்கு பெயர் பெற்றது நம்ம சாரா பேஷன்ஸ். தனிப்பட்ட ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப பொருந்தும் வகையில் பலவிதமான ரகங்கள் மற்றும் வண்ணமயமான கலெக்ஷன்ஸ் உள்ளன. புத்தம் புதிய கலெக்ஷன்களின் மூலம் இன்றைய தலைமுறையினருக்காக அதிநவீன பாரம்பரிய பட்டுகளுக்கு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது.

வண்ணமயமான ரெடிமேட் பட்டு கலெக்ஷன்ஸ்

ரெடிமேட் பட்டு பாவாடை யை அறிமுகம் செய்தது நம் சாரா ஃபேஷன்ஸ்.

பிறந்த குழந்தை முதல் டீனேஜ் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் தயாரித்து வருகிறோம். “கிராண்டான பட்டு பாவாடை முதல் ட்ரெண்டியான  கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

பட்டு பாவாடை மட்டுமல்லாமல், உயர்தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி மற்றும் கண்களை பறிக்கும் வண்ணமயமான  பட்டு சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். நம்ம சாரா ஃபேஷன்ஸ்-ல் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் வகையில் விதவிதமான மற்றும் வண்ணமயமான பட்டு பாவாடை & தாவணி மற்றும் பட்டு சர்ட் & வேஸ்டி பிரத்யேகமாக தயாரித்து வருகிறோம்.

பெயரிடும் விழா, பிறந்த நாள் விழா, பொங்கல், தீபாவளி, திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் போன்ற அனைத்து விசேஷங்களுக்கும் நம்ம சாரா கண்களை கவரும் வகையில் வண்ணமயமான  ரெடிமேட் பட்டுப்பாவாடைகளை  அறிமுகப்படுத்தினர். நம்ம சாரா–வில் பாரம்பரியமிக்க பட்டு ப்ராக்ஸ் தயாரித்து வருகிறோம். கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

சிறந்த தரம்! வண்ணமயமான ரெடிமேட் பட்டு கலெக்ஷன்ஸ் இன்றே ஆர்டர் செய்யுங்கள்  உங்கள் சாரா-வில்

 Like
பாரம்பரியத்தின் அடையாளம்

பாரம்பரியத்தின் அடையாளம்: தமிழ்நாடு பல்வேறு கலாச்சாரங்களின் மற்றும் வரலாற்றில் முன்னணியில் நிற்கும் ஓர் அழகான நாடு. மக்கள் தங்கள் கலாச்சாரத்தை மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய பட்டு ஆடைகளை இன்றைய காலத்திலும் போற்றுகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தை உலகெங்கிலும் நிலைநாட்டும் வகையில், சாரா “ரெடிமேட் பட்டுப்பாவாடைகளுக்கு” தனி இடம் உண்டு. அனைத்து விதமான சுபகாரியங்களுக்கு மட்டுமே பட்டு அணியும் மரபு மாற்றமடைந்து வருகிறது என்பது பெருமைக்குரியது. ஜீன்ஸ், மிடி , டீ சர்ட் போன்ற மேற்கத்திய ஆடைகள் மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் பெண்கள், தற்போது பாரம்பரிய பட்டு ஆடைகள் மீதும் அதிக ஆர்வம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

பாரம்பரிய ரெடிமேட் பட்டு என்றாலே நம்ம “சாரா ஃபேஷன்ஸ்” தான்

“ரெடிமேட் பட்டு பாவாடை” யை அறிமுகம் செய்தது நம் சாரா ஃபேஷன்ஸ். தொடக்க காலத்தில் நாங்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் மட்டுமே வைத்து சுடிதார்களை தைத்து வந்தோம். அக்கட்டத்தில் சுடிதார் மெட்டீரியல்களுக்கு கடும் போட்டி இருந்தது. எனவே மக்களுக்கு எங்களை வேறுபடுத்தி காட்டவேண்டுமென்றும் மற்றும் தனித்து நிற்கவேண்டும் என்ற எண்ணத்தோடும், புதிதாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தோம். அப்போதுதான் ஒரு சின்ன யோசனை “பட்டு பாவாடையை ரெடிமேட்-ஆக தைத்தால் எப்படி இருக்கும்” என தோன்றியது. அந்த முயற்சியில் தான் ரெடிமேட் பட்டு பாவாடையை அறிமுகப்படுத்தினோம்.

அந்த சின்ன யோசனை தான் இப்பொழுது, நம்ம மதுரையில் “சாரா ஃபேஷன்ஸ்” முன்னணியாக திகழ்ந்து நிற்கிறது. இந்த நவீன உலகில் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பிரத்யேகமான டிசைன்ஸ் மற்றும் எண்ணற்ற வண்ணங்களுடன் உயர்தரம் வாய்ந்த பட்டு பாவாடையை தயாரித்து வழங்கி வருகிறோம்.

பிறந்த குழந்தை முதல் டீனேஜ் பெண்கள் வரை அனைவருக்கும் தயாரித்து வருகிறோம். “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.
பட்டு பாவாடை மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி மற்றும் கண்களை பறிக்கும் வண்ணங்களுடன் பட்டு சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். நம்ம சாரா ஃபேஷன்ஸ்-ல் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் வகையில் பட்டு பாவாடை & தாவணி மற்றும் பட்டு சர்ட் & வேஸ்டி பிரத்யேகமாக தயாரித்து வருகிறோம்.

சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!

 Like
ரெடிமேட் பட்டு ப்ராக்ஸ்

எந்த விஷேசமாக இருந்தாலும், தமிழ்நாட்டிலேயே பலரும் விரும்புகின்ற ஆடைகளில் பட்டுப்பாவாடையும் ஒன்று.  நம்ம மதுரையில் 1997 இல் தொடங்கிய சாரா ஃபேஷன்ஸ் இன்று ஈரோடு மற்றும் கோயம்பத்தூரில் இரு ஷோரூமிலும் பட்டு ப்ராக்ஸ்-ன் தனித்துவமான கலெக்க்ஷன்ஸ்-களை  வழங்குகிறது.

பெயரிடும் விழா, பிறந்த நாள், பொங்கல், தீபாவளி, திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் போன்ற அனைத்து விசேஷங்களுக்கும் நம்ம சாரா கண்களை கவரும் வண்ணமயமான  ரெடிமேட் பட்டுப்பாவாடைகளை  அறிமுகப்படுத்தினர்.

Readymade Pattu Frocks

Traditional Pattu Frocks

இந்த படத்தைப் பார்க்கும் யாவருக்கும்  இந்த சுட்டி குழந்தைகளின் அணிந்திருக்கும் ஆடைகளும் அதன் அழகில் ஒளிரும் தன்மையும் தெளிவாக காணலாம்.

பாரம்பரிய கலாச்சாரத்திலிருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது. அதில் ஆடைகளும் விட்டுவைக்கப்படவில்லை. ஆனால் “மாற்றம் மட்டுமே நிலையானது” என்பது உண்மை.

எனவே , கண்களை கவரும் அழகிய ரெடிமேட் பட்டு ப்ராக்ஸ் இந்த காலத்திற்கு ஏற்றவாறு நவீன வேலைப்பாடுகளுடன் நம்ம சாராவில்

உங்கள் வீட்டு சுட்டி இளவரசிகளுக்கென்று வடிவமைக்கபட்டுள்ளன

ரெடிமேட் பட்டு என்றாலே நம்ம சாராதான்

நம்ம சாராவில், குட்டி குழந்தைகளுக்கென்று சரியாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பட்டு ப்ராக்ஸ்களின் வண்ணமயமான கலெக்க்ஷன்ஸ் வழங்குகிறோம். நம்ம சாரா-வில் பிறந்த குழந்தைகளுக்கு பட்டு ப்ராக்ஸ்-உடன் கிப்ட்செட்டும் வழங்குகிறோம். அந்த கிப்ட் செட்டில் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ குணமுடைய பொருட்கள் உள்ளன. அதனுடைய பயன்கள்.

  • பால் மணி , பால் வளையல் – பால் ஜீரணத்திற்கு
  • வசம்பு கைகாப்பு – நுகர்வதற்கு
  • கருப்பு வளையல்- கண் திருஷ்டிகளிருந்து விடுபட
  • வசம்பு பட்டை-பால் மற்றும் உணவுகள் செறிப்பதற்கு
  • சங்கு-மருந்துகளின் மருத்துவ குணங்கள் மாறாமல் இருக்க
  • கால் காப்பு-காற்று சேஷ்டைகள் நெருங்காமலிருக்க
  • சிரட்டை கண்மை – திருஷ்டி கழிப்பதற்கு
  • கஸ்தூரி மஞ்சள் – சரும நோய்கள் வராமலிருக்க

எனவே, நமது சாராவில் பாரம்பரியமிக்க பட்டு ப்ராக்ஸ் தயாரித்து வருகிறோம். கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்வரை இங்கே கிடைக்கும்.

சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!

 

 Like
Pattu pavadai for babies

நமது வீட்டின் குட்டி இளவரசிகளாக உலா வரும் பெண் குழந்தைகளுக்கான வண்ணமயமான பட்டுப்பாவாடைகள் புதிய வடிவமைப்பில் நவீன உலகிற்கு ஏற்ப கண்ணை கவரும் வகையில் உள்ளன. விருந்துகள் மற்றும் விழா கொண்டாட்டத்திற்கு ஏற்றவாறு கலைநயத்துடன் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் அழகிய வேலைப்பாடுகள் நவீன முறையில் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளதால் கண்ணை கவரும் வகையில் உள்ளன.

ஜொலிக்கும் பாரம்பரிய ஆடைகள்

பாரம்பரிய ஆடைகள் எனும்போது பட்டுப்பாவாடை சட்டை போன்ற ஆடைகள் அதிகமாக சரிகை வேலைப்பாடும், எம்பிராய்டரி செய்யப்பட்டும் கிடைக்கின்றன. இதில் சில மாற்றம் செய்யப்பட்டு புதிய கற்கள் மற்றும் மணிகள் பதித்தவாறும், அதிக பொலிவு கொண்ட தங்க மற்றும் வெள்ளி நிற சரிகை வேலைப்பாடும் உள்ளவாறும் உருவாக்கப்படுகிறது.

பட்டுப்பாவாடை என்பது பெண் குழந்தைகளின் அழகை மேலும் அழகாக்கும் மாயக் கண்ணாடி. பட்டாம்பூச்சியின் பல்வேறு வண்ணங்களை நம்மால் எண்ணி விட முடியும் ஆனால் பட்டுபாவாடையின் ரகம் மற்றும் வடிவங்களை இவ்வளவுதான் என்று முடித்து விட முடியாது! காரணம் தினமும் புதிது புதிதாக உருவாகும் வடிவங்கள் பட்டுப்பாவாடைற்கு மேலும் சிறப்பு கொடுக்கின்றன.

நவீன உலகில் பட்டுபாவாடையின் வரவேற்பு

இன்றைய நவீன உலகில், பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பட்டுப்பாவாடை அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டுப்பாவாடை அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டுப்பாவாடயை அவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஜீன்ஸ், மிடி, சுடி, மாடர்ன் ட்ரஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்தாலும், தமிழின் பாரம்பரியமான, “பட்டுப்பாவாடை-க்கு” தான் இன்றும் என்றும் சிறப்பு.

பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ரெடிமேட் பட்டுப்பாவாடை கலெக்க்ஷன்ஸ் நமது சாரா-வில்! பாரம்பரியமிக்க பட்டு பாவாடை தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளம் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். . “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

பட்டு என்றாலே சாரா

நம்ம சாராவில், சரியாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பட்டு பாவாடிகளின் நேர்த்தியான தொகுப்பை வழங்குகிறோம். பட்டுப்பாவாடைகள் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டு தென்னிந்தியர்களுக்கு பல தலைமுறைகளாக சரியான பாரம்பரிய உடைகளில் முன்னணி பெற்றது.

பாரம்பரிய ஆடைகளின் அடித்தளத்தை நவீன வடிவமைப்புகளுடன் கொண்டுள்ளது. சாரா-வின் பட்டுப்பாவாடைகள் புதிதாகப் பிறந்த குழந்தைகளிலிருந்து வெவ்வேறு அளவுகளில் வருகின்றன. இதில் பல நிழல்கள், வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. இந்த ஆடைகளின் சிறப்பு லூப் வளையங்களும் உள்ளன, அவை ஆடையின் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.

 Like
பழமை மாறா பட்டுப்பாவாடை

பழமை மாறா பட்டுப்பாவாடை: தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பரிய ஆடையான பட்டுகள் தான். பட்டுகளை தங்களுடைய கலாச்சார ஆடைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் “பட்டு” என்றாலே தமிழகம் நினைவுக்கு வருவதை யாராலும் தவிர்க்கவே முடியாது.

பழமை மாறா பட்டுப்பாவாடை

இந்தியாவின் தெற்கு நாடுகளில், ஒரு பெண்ணை திருமணத்திற்கு முன்பு வேறுபடுத்துகின்ற பாரம்பரிய உடைககளில் பட்டு பாவாடை ஒரு வகை. இந்த ஆடையை பொதுவாக அனைத்து குழந்தைகளும், சிறுமிகளும், இளம்பெண்களும் அணிவார்கள். பொதுவாக பட்டுடன் தயாரிக்கப்பட்டு தென்னிந்திய பெண்களின் தோற்றத்தை உயர்த்தும்.

பிரகாசமான வண்ணங்களில், பட்டுபாவாடை தென்னிந்தியாவில் பாரம்பரியத்தின் ஒரு சிறந்த விருந்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடையின் தனித்துவம் அதன் மாறுபட்ட பார்டரில் உள்ளது.
ஆரம்ப நாட்களில் பட்டுப்பாவாடை எளிய பட்டு ஆடைகளாக பாரம்பரியமாகவும் மற்றும் பிரகாசமாகவும் காணப்பட்டன. இன்று, பல்வேறு கலாச்சாரங்களின் செல்வாக்கால், இந்த பாரம்பரிய உடைகளில் சில சிறிய வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, பட்டுபாவாடையில் கண்ணாடி, எம்பிராய்டரி, சர்தோசி போன்ற வேலைப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.

சுட்டி பெண்களிடையே  பட்டுபாவாடையின் வரவேற்பு

இன்றைய காலத்தில், பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பட்டுப்பாவாடை அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டுப்பாவாடை அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டுப்பாவாடயை அவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஜீன்ஸ், மிடி, சுடி, மாடர்ன் ட்ரஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழின் பாரம்பரியமான, “பட்டுப்பாவாடை-க்கு” தான் என்றும் இன்றும் சிறப்பு.

பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ரெடிமேட் பட்டுப்பாவாடை கலெக்க்ஷன்ஸ் நமது சாரா-வில்! பாரம்பரியமிக்க பட்டு பாவாடை தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளம் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். . “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!

 1
dhoti for kids

என்னதான் டிப் டாப்பா ஆடை அணிந்தாலும் பாரம்பரிய ஆடைகள் அணியும் போது இருக்கக் கூடிய பெருமை வேறு எந்த ஆடையிலும் கிடைக்காது என்றே கூறலாம். குறிப்பாக ஆண்களின் ஆடைகளில் வேஷ்டி அணியும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

வேஷ்டி தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை.தமிழர்களின் கலாசார அடையாளமாகவும், ஆண்களுக்கான கம்பீரத்தின் உணர்பொருளாகவும் வேஷ்டி தமிழர்களால் வரவேற்கப்படும் ஒரு ஆடையாகும்.தொன்று தொட்டு தமிழர்கள் வேஷ்டி அணியும் பழக்கத்தை இன்றும் தங்கள் வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

வேறு பெயர்கள்

தமிழர்கள் பெருமிதமாக அணியும் வேஷ்டி சம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா என்று பெயர். குஜராத்தில் தோத்தியு, ஒரிய மொழியில் தோத்தி, வங்காளத்தில் தூட்டி, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாபி மொழியில் லாச்சா, உ.பி, பீகார்மாநிலங்களில் மந்தாணி, கன்னட மொழியில் கச்சே-பான்ச்சே, அசாமியில் சூர்யா, தமிழகத்தில் வேட்டி மற்றும் வேஷ்டி என்று அழைப்பார்கள்.

வகைகள்

பருத்தி நூலில் நூற்கும் வேஷ்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேஷ்டியில், முகூர்த்த வேஷ்டி, தற்காப்பு கலை வேஷ்டி, பட்டு வேஷ்டி, பூஜை வேஷ்டி, சாதாரண வேஷ்டி என பல வகை உண்டு.

பண்பாடு

முதலில் வேஷ்டி நம் பாரம்பரிய அடையாளம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆண்கள் அணியும் ஒரு சாதாரண உடையாக வேஷ்டி இருந்து வருகிறது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய ஆடையான வேஷ்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முக்கியமாக திருவிழா மற்றும் திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் வேஷ்டி அணிவதை பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர். இத்தகைய பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மிக்க வேஷ்டியின் மீது இன்றைய தலைமுறையினர் பெரிதும் ஆர்வம் கொள்ள தயங்குகின்றனர் .

ஏனெனில் மேற்கத்திய கலாசாரம் தொற்றி இருப்பதால், நவீன காலத்தில் வித, விதமான ஆடைகளை அணிய தொடங்கி விட்டோம். இருப்பினும் சில சமயங்களில் கட்டாயத்தின் பேரில் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். அந்தவகையில் புத்தாண்டு, பிறந்தநாள், பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கியமான கொண்டாட்டங்களில் இப்போது கட்டாயம் இடம் பிடித்திருப்பது, பட்டு வேஷ்டிகள்தான்.

இளம்சிறார்களிடையே வேஷ்டியின் வரவேற்பு

இன்றைய காலத்தில், சிறுவர்கள் பட்டு வேஷ்டி அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டு வேஷ்டி அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டு வேஷ்டியை சிறுவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் ச ஃபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, “பட்டு வேஷ்டிக்கு” தான் என்றும் இன்றும் சிறப்பு.

சிறுவர்களுக்கான பிரத்யேக ரெடிமேட் கலெக்க்ஷன்ஸ்! சாரா வழங்கும் “அழகுராஜா”, பாரம்பரியம் மாறா பட்டு வேஷ்டி மற்றும் சட்டைகள்!

 1

தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்” என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் நம் தமிழர்கள். தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பெருமைமிகு பாரம்பரிய பட்டு ஆடைகள்தான். பட்டு ஆடைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றி அமைத்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டு ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பட்டு என்றாலே முதலில் நம் நினைவுக்கு தமிழகம் வருவதை தவிர்க்கவே முடியாத ஒன்று.

உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய ஆடைகளிலேயே “பட்டு” மிகவும் சிறப்பு வாய்ந்தது. எளிதில் உருவாக்க முடியாத கலை நயமிக்க பட்டாடை, அதன் பளபளப்பும், நிலைத்து நிற்கக்கூடிய தன்மையும் அதனை சிறப்பாக எடுத்துகாட்டுகிறது. பட்டுடைய மென்மை தன்மையும், அதன் பளபளப்பும், அணியும்போது  நமது அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன.

வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் அணிய முக்கிய பங்கு வகிப்பது பட்டு ஆடைகள் தான்.  பண்டிகைகளிலேயே குறிப்பாக பொங்கல், தீபாவளி திருநாளில் புது ஆடைகளை உடுத்தி மகிழ்வார்கள்.

பெண் குழந்தைகளை அழகாக காட்டும் ஆடை வகைகள் ஆயிரம் இருந்தாலும் அதில் குறிப்பாக தென்னிந்திய உடைகள் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பட்டு பாவாடையை கூறலாம். பட்டு பாவாடைக்கு என்று தனித்துவமும் வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது.சிறுவயதில் குழந்தைகள் பட்டு பாவாடை சட்டை அணிந்து இங்கும் அங்கும் நடப்பதைப் பார்ப்பதற்கு அழகிய வண்ணத்துப் பூச்சி இங்கும் அங்கும் பறப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.

அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும் மாடர்ன் உடைகள் பல இருந்தாலும் குறிப்பாக மிகவும் அழகாக அணிந்து கொள்ளும் ஆடை என்றால்  பட்டு வேஸ்டி சர்ட் -யை கூறலாம். பட்டு வேஸ்டி மற்றும் சர்ட்-க்கு அதிக அளவில் வரவேற்பு இக்காலத்தில் காணப்பட்டு வருகிறது. இளம் சிறுவர்கள் பட்டு வேஸ்டி மட்டும் சர்ட் அணிந்து வரும்போது மிகவும் தோரணையாக காணப்படுவார்கள்.

விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் மற்றும் திருவிழா நாட்களில்  வேஸ்டி- சர்ட், பட்டுப்பாவாடையும்  கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!

எனவே, நமது சாரா-வில் பாரம்பரியமிக்க பட்டு பாவாடை மற்றும்  தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி & சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். இந்த தீப ஒளி திருநாளுக்கு நம்ம  சாரா ஃபேஷன்ஸ்- ன் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் பட்டு பாவாடை & தாவணி, பட்டு சர்ட் & வேஸ்டி யை வாங்கி அணிந்து மகிழுங்கள்!

 1
தாய்மாமன் சீதனம்

தமிழர்களின் ஒவ்வொரு பழக்க வழக்கத்தையும் ஆராய்ந்தால் அதில் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாசாரம் நிறைந்து இருப்பதை காணலாம். ஒவ்வொரு விழாக்களிலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கின்றனர். தாய்-தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அத்தை, மாமா உள்பட அனைத்து உறவுகளுக்கும் உரிய இடம் அளிக்கப்படுகிறது.

தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமன்

தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் முதல் உணவாக சீனிப்பால் அளிப்பதில் துவங்கி, காதணி விழா, நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா செய்வது வரை ஒரு தாய்மாமன் தனது பங்களிப்பை பெரிதும் அளித்து வருகிறார்.

உறவின் அருமையும் பெருமையும்

உறவுகளிலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உறவு என்றால் “தாய்மாமன்” உறவு தான். தனது தங்கைக்கு தகப்பனாய் அவள் பெரும் குழந்தைக்கு ஒரு பாதுகாவலனாய் அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிகொடுத்து அதன் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமனின் சிறப்பு. அக்கா/தங்கையின் குழந்தையை தன் குழந்தையை போன்றே நன்கு கவனிப்பார். அக்குழந்தையின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று அக்காலத்திலேயே தமிழர் பண்பாடு கூறுகிறது.

“சீருக்கு பேர்போன தாய்மாமன் உறவு”

“காது குத்துவதிலிருந்து திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுப்பது வரையிலும்” முன்னிற்பதே தாய்மாமன் தான்.

தொட்டிலிடுதல்

குழந்தை பிறந்ததும் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.

காது குத்துதல்

காதுகளில் துளையிட்டு ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது.

பூப்புச் சடங்கு

ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.

தங்கையின் மகள் பூப்பெய்தியதும் தாய் வீட்டுசீர்வரிசையாக (மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.

பட்டம் கட்டுதல்

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

“நிகரில்லா உறவு”

குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது. குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். தமிழர் பண்பாடு விளங்க, பாரம்பரியத்தை தொடருங்கள். அது உங்களுடைய உறவுகளை பலப்படுத்துவதோடு, உங்களின் பிள்ளைகளுக்கும் அந்த உறவுகளும், அதன் மூலமான உணர்வுகளும் தொடர்ந்து கிடைக்கும்.

இந்த அனைத்து விதமான விசேஷங்களில் தாய்மாமன் சீர்கள் முன்னிற்கும். இந்த சீர்களிலேயே பெருமையாக பேசப்படுவது “பட்டு” தான். இந்த பெருமையை இன்னும் மிகைப்படுத்துவதற்காவே தாய்மாமன் விலையுயர்ந்த மற்றும் தரமான பட்டு கொடுப்பார்.  இதுமட்டுமல்லாமல், தனது உரிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அவர் கொடுக்கும் சீர்வரிசையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஆகவே காதணி விழா முதல் திருமண விழா வரை அனைத்திற்கும் பட்டு துணி முக்கிய பங்கு வகிக்கிறது.

பட்டு என்றாலே சாரா

தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரத்தின் பழைமையை நினைவு படுத்தும் விதமாகவும், வருங்கால சந்ததிகளுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் “தாய் மாமன் சீதனம்” என்பதை வழங்குகிறது “சாரா “.

 1
half saree model

Pattu Lehengas: Most of the south Indian girls like to wear pattu lehenga for any occasions which is available in traditional and modern looks. In addition, traditional embroidery, zari work, beadwork like prints, shimmer lehenga’s in the market.

Young girls from states of south India wear pattu lehengas. They are usually made of cotton silk. In fact, traditional pattu lehenga will worn during the special south Indian festivals. You should go for traditional wedding colours like reds, orange, pinks.

Red – Effortlessly Stylish!

Important to realize, red is such a bold colour that pattu lehengas look better when they are kept simple, with a standard style.

This type of traditional simple red colour lehenga ranges from an orange-red sunset hue to a deep blood red. You didn’t require to go monotone – trying something contrasting blouse in violet or blue. Or a thick bottom border in dull gold its look stunning.

 

Red Pattu Lehenga     Red Pattu Lehenga

 

Classically Beautiful – Pink Color Pattu Lehenga

A simple pink colour half saree in pattu with golden thread work is an ensemble that can make you the cynosure of all eyes.  There are so many various combinations to wear a lehenga. You may leave a lasting impression with every one of them.

 

pattu lehenga     Pink Pattu Lehenga

 

Wedding season is coming up. All are going for wedding wear shopping. Shop some stunning and elegant outfits from Saara.

 Like

Glorifies Your Look with Saara!


Store Location

Saara Fashions
3/184, Alagarkovil Main Road,
Madurai – 625 301. Tamilnadu, India.
Phone : +91 452 - 2470318, 2470320, Mobile: +91 95974-49419
Email : saarafashions@gmail.com, info@saarafashions.com

Hi there! Click one of our representatives below and we will get back to you as soon as possible.

Chat with us on WhatsApp
Your Name
Your Mobile
*All information provided will be kept confidential.
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message