தமிழர்களின் ஒவ்வொரு பழக்க வழக்கத்தையும் ஆராய்ந்தால் அதில் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாசாரம் நிறைந்து இருப்பதை காணலாம். ஒவ்வொரு விழாக்களிலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கின்றனர். தாய்-தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அத்தை, மாமா உள்பட அனைத்து உறவுகளுக்கும் உரிய இடம் அளிக்கப்படுகிறது.

தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமன்

தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் முதல் உணவாக சீனிப்பால் அளிப்பதில் துவங்கி, காதணி விழா, நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா செய்வது வரை ஒரு தாய்மாமன் தனது பங்களிப்பை பெரிதும் அளித்து வருகிறார்.

உறவின் அருமையும் பெருமையும்

உறவுகளிலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உறவு என்றால் “தாய்மாமன்” உறவு தான். தனது தங்கைக்கு தகப்பனாய் அவள் பெரும் குழந்தைக்கு ஒரு பாதுகாவலனாய் அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிகொடுத்து அதன் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமனின் சிறப்பு. அக்கா/தங்கையின் குழந்தையை தன் குழந்தையை போன்றே நன்கு கவனிப்பார். அக்குழந்தையின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று அக்காலத்திலேயே தமிழர் பண்பாடு கூறுகிறது.

“சீருக்கு பேர்போன தாய்மாமன் உறவு”

“காது குத்துவதிலிருந்து திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுப்பது வரையிலும்” முன்னிற்பதே தாய்மாமன் தான்.

தொட்டிலிடுதல்

குழந்தை பிறந்ததும் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.

காது குத்துதல்

காதுகளில் துளையிட்டு ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது.

பூப்புச் சடங்கு

ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.

தங்கையின் மகள் பூப்பெய்தியதும் தாய் வீட்டுசீர்வரிசையாக (மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.

பட்டம் கட்டுதல்

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

“நிகரில்லா உறவு”

குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது. குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். தமிழர் பண்பாடு விளங்க, பாரம்பரியத்தை தொடருங்கள். அது உங்களுடைய உறவுகளை பலப்படுத்துவதோடு, உங்களின் பிள்ளைகளுக்கும் அந்த உறவுகளும், அதன் மூலமான உணர்வுகளும் தொடர்ந்து கிடைக்கும்.

இந்த அனைத்து விதமான விசேஷங்களில் தாய்மாமன் சீர்கள் முன்னிற்கும். இந்த சீர்களிலேயே பெருமையாக பேசப்படுவது “பட்டு” தான். இந்த பெருமையை இன்னும் மிகைப்படுத்துவதற்காவே தாய்மாமன் விலையுயர்ந்த மற்றும் தரமான பட்டு கொடுப்பார்.  இதுமட்டுமல்லாமல், தனது உரிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அவர் கொடுக்கும் சீர்வரிசையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஆகவே காதணி விழா முதல் திருமண விழா வரை அனைத்திற்கும் பட்டு துணி முக்கிய பங்கு வகிக்கிறது.

பட்டு என்றாலே சாரா

தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரத்தின் பழைமையை நினைவு படுத்தும் விதமாகவும், வருங்கால சந்ததிகளுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் “தாய் மாமன் சீதனம்” என்பதை வழங்குகிறது “சாரா “.

Share this post on: