நமது வீட்டின் குட்டி இளவரசிகளாக உலா வரும் பெண் குழந்தைகளுக்கான வண்ணமயமான பட்டுப்பாவாடைகள் புதிய வடிவமைப்பில் நவீன உலகிற்கு ஏற்ப கண்ணை கவரும் வகையில் உள்ளன. விருந்துகள் மற்றும் விழா கொண்டாட்டத்திற்கு ஏற்றவாறு கலைநயத்துடன் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் அழகிய வேலைப்பாடுகள் நவீன முறையில் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளதால் கண்ணை கவரும் வகையில் உள்ளன.

ஜொலிக்கும் பாரம்பரிய ஆடைகள்

பாரம்பரிய ஆடைகள் எனும்போது பட்டுப்பாவாடை சட்டை போன்ற ஆடைகள் அதிகமாக சரிகை வேலைப்பாடும், எம்பிராய்டரி செய்யப்பட்டும் கிடைக்கின்றன. இதில் சில மாற்றம் செய்யப்பட்டு புதிய கற்கள் மற்றும் மணிகள் பதித்தவாறும், அதிக பொலிவு கொண்ட தங்க மற்றும் வெள்ளி நிற சரிகை வேலைப்பாடும் உள்ளவாறும் உருவாக்கப்படுகிறது.

பட்டுப்பாவாடை என்பது பெண் குழந்தைகளின் அழகை மேலும் அழகாக்கும் மாயக் கண்ணாடி. பட்டாம்பூச்சியின் பல்வேறு வண்ணங்களை நம்மால் எண்ணி விட முடியும் ஆனால் பட்டுபாவாடையின் ரகம் மற்றும் வடிவங்களை இவ்வளவுதான் என்று முடித்து விட முடியாது! காரணம் தினமும் புதிது புதிதாக உருவாகும் வடிவங்கள் பட்டுப்பாவாடைற்கு மேலும் சிறப்பு கொடுக்கின்றன.

நவீன உலகில் பட்டுபாவாடையின் வரவேற்பு

இன்றைய நவீன உலகில், பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பட்டுப்பாவாடை அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டுப்பாவாடை அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டுப்பாவாடயை அவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஜீன்ஸ், மிடி, சுடி, மாடர்ன் ட்ரஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்தாலும், தமிழின் பாரம்பரியமான, “பட்டுப்பாவாடை-க்கு” தான் இன்றும் என்றும் சிறப்பு.

பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ரெடிமேட் பட்டுப்பாவாடை கலெக்க்ஷன்ஸ் நமது சாரா-வில்! பாரம்பரியமிக்க பட்டு பாவாடை தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளம் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். . “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

பட்டு என்றாலே சாரா

நம்ம சாராவில், சரியாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பட்டு பாவாடிகளின் நேர்த்தியான தொகுப்பை வழங்குகிறோம். பட்டுப்பாவாடைகள் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டு தென்னிந்தியர்களுக்கு பல தலைமுறைகளாக சரியான பாரம்பரிய உடைகளில் முன்னணி பெற்றது.

பாரம்பரிய ஆடைகளின் அடித்தளத்தை நவீன வடிவமைப்புகளுடன் கொண்டுள்ளது. சாரா-வின் பட்டுப்பாவாடைகள் புதிதாகப் பிறந்த குழந்தைகளிலிருந்து வெவ்வேறு அளவுகளில் வருகின்றன. இதில் பல நிழல்கள், வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. இந்த ஆடைகளின் சிறப்பு லூப் வளையங்களும் உள்ளன, அவை ஆடையின் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.

Share this post on: