தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்” என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் நம் தமிழர்கள். தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பெருமைமிகு பாரம்பரிய பட்டு ஆடைகள்தான். பட்டு ஆடைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றி அமைத்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டு ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பட்டு என்றாலே முதலில் நம் நினைவுக்கு தமிழகம் வருவதை தவிர்க்கவே முடியாத ஒன்று.

உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய ஆடைகளிலேயே “பட்டு” மிகவும் சிறப்பு வாய்ந்தது. எளிதில் உருவாக்க முடியாத கலை நயமிக்க பட்டாடை, அதன் பளபளப்பும், நிலைத்து நிற்கக்கூடிய தன்மையும் அதனை சிறப்பாக எடுத்துகாட்டுகிறது. பட்டுடைய மென்மை தன்மையும், அதன் பளபளப்பும், அணியும்போது  நமது அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன.

வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் அணிய முக்கிய பங்கு வகிப்பது பட்டு ஆடைகள் தான்.  பண்டிகைகளிலேயே குறிப்பாக பொங்கல், தீபாவளி திருநாளில் புது ஆடைகளை உடுத்தி மகிழ்வார்கள்.

பெண் குழந்தைகளை அழகாக காட்டும் ஆடை வகைகள் ஆயிரம் இருந்தாலும் அதில் குறிப்பாக தென்னிந்திய உடைகள் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பட்டு பாவாடையை கூறலாம். பட்டு பாவாடைக்கு என்று தனித்துவமும் வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது.சிறுவயதில் குழந்தைகள் பட்டு பாவாடை சட்டை அணிந்து இங்கும் அங்கும் நடப்பதைப் பார்ப்பதற்கு அழகிய வண்ணத்துப் பூச்சி இங்கும் அங்கும் பறப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.

அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும் மாடர்ன் உடைகள் பல இருந்தாலும் குறிப்பாக மிகவும் அழகாக அணிந்து கொள்ளும் ஆடை என்றால்  பட்டு வேஸ்டி சர்ட் -யை கூறலாம். பட்டு வேஸ்டி மற்றும் சர்ட்-க்கு அதிக அளவில் வரவேற்பு இக்காலத்தில் காணப்பட்டு வருகிறது. இளம் சிறுவர்கள் பட்டு வேஸ்டி மட்டும் சர்ட் அணிந்து வரும்போது மிகவும் தோரணையாக காணப்படுவார்கள்.

விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் மற்றும் திருவிழா நாட்களில்  வேஸ்டி- சர்ட், பட்டுப்பாவாடையும்  கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!

எனவே, நமது சாரா-வில் பாரம்பரியமிக்க பட்டு பாவாடை மற்றும்  தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி & சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். இந்த தீப ஒளி திருநாளுக்கு நம்ம  சாரா ஃபேஷன்ஸ்- ன் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் பட்டு பாவாடை & தாவணி, பட்டு சர்ட் & வேஸ்டி யை வாங்கி அணிந்து மகிழுங்கள்!

Share this post on: